இருமல் நிவாரண மருந்துகள் குறித்த பாதுகாப்பு தரநிலை
October 22 , 2025 14 days 25 0
45% டைஎதிலீன் கிளைகோல் (DEG) கொண்ட (நச்சுத் தன்மை கொண்ட தொழில்துறை பயன்பாட்டுக் கரைப்பான்) கோல்ட்ரிஃப் இருமல் நிவாரண மருந்தினை உட் கொண்டதால் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குறைந்தது 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த இருமல் நிவாரணி தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் விநியோகிக்கப்பட்டது.
கலப்படமாக்கப்பட்ட இந்திய நிவாரணிகள் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகளின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், 2022 ஆம் ஆண்டில் இதே போன்ற துயரங்கள் நிகழ்ந்தன.
இந்தியாவின் இரட்டை மருந்து ஒழுங்குமுறை அமைப்பில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மற்றும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகிய இரண்டும் அடங்கும்.