- காசாவின் ஹமாஸ் குழுவானது ராக்கெட்டுகளைக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
- இந்த ராக்கெட்டுகள் இஸ்ரேலின் இரும்புக் கவசம் எனும் பாதுகாப்பு அமைப்பினால் தடுக்கப்பட்டு அழிக்கப் படுகின்றன.
- இந்தச் செயல்பாடானது அந்த ராக்கெட்டுகள் கண்ணுக்குத் தெரியாத ஒரு கவசத்தைத் தாக்கியது போல் புலப்படுகிறது.
இரும்புக் கவசம் அல்லது அயர்ன் டோம் பற்றிய தகவல்கள்
- இது ஒரு வான்வழிப் பாதுகாப்பு அமைப்பாகும்.
- இது எந்த ஒரு ஏவுகணையையும் ராக்கெட்டுகளையும் தாக்கி அழிக்கிறது.
- இது குறுகிய வரம்புடைய மற்றும் வானிலேயே இலக்கைத் தாக்கி அழிக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.
- இது ராக்கெட்டுகள், சிறு பீரங்கிகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிறு பீரங்கிப் படை மற்றும் ஆளில்லா தாக்குதல் வாகனங்கள் போன்றவற்றையும் தாக்கி அழிக்கும்.
- அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பானது 2011 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது.
