தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலின் காமனூரில் உள்ள ஒரு இரும்புக்காலப் புதைகுழித் தளத்தில் இந்தியத் தொல்லியல் துறை (ASI) அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டம், பழனி மலைகளில் உள்ள பல இடங்களை உள்ளடக்கிய மூன்று ஆண்டு கால அகழ்வாராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் கல்வறைகள், கற்திட்டைகள், ஈமத் தாழிகள் மற்றும் குழிக் கல்லறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
இது கொடைக்கானலில் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும் முதல் அகழாய்வு ஆகும் என்பதோடுஇதற்கு முன்னர் 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் தாண்டிக்குடியில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.