TNPSC Thervupettagam

இருவாட்சி பறவை வளங்காப்பு மையம்

September 19 , 2025 15 hrs 0 min 35 0
  • தமிழ்நாடு வனத்துறையானது, இந்தியாவின் முதல் இருவாட்சி வளங்காப்பிற்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்காக வால்பாறை பீடபூமியில் உள்ள அட்டகட்டி பகுதியைத் தேர்வு செய்தது.
  • இந்த மையமானது, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் (ATR) பொள்ளாச்சி-வால்பாறை சாலைக்கு அருகில் உள்ள வனத்துறை வளாகத்தில் அமைக்கப்படும்.
  • அருகி வரும் உயிரினங்கள் வளங்காப்பு மூலதன நிதியின் கீழ் இந்த திட்டத்திற்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மலை இருவாட்சி, மலபார் சாம்பல் இருவாட்சி, மலபார் கருப்பு வெள்ளை இருவாட்சி மற்றும் இந்திய சாம்பல் இருவாட்சி ஆகிய நான்கு இருவாட்சி இனங்கள் மீது கவனம் செலுத்தும்.
  • இந்த மையம் IUCN மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்