இருவாட்சிப் பறவைகளுக்கான சமூகம் சார்ந்த முன்னெடுப்பு
May 29 , 2023 802 days 408 0
காடர் என்ற ஒரு பழங்குடிச் சமூகத்தினை உள்ளடக்கிய ஒரு சமூகம் சார்ந்த பாதுகாப்பு முன்னெடுப்பானது, குறைந்து வரும் இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கையினை மீண்டும் உயர்த்தியுள்ளது.
இருவாட்சிப் பறவைகள் கூடுகட்டும் மரங்களின் கண்காணிப்பு திட்டமானது 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வததையும் வெகுவாக மறைந்து வரும் அவற்றின் கூடு கட்டும் வாழ்விடங்களை மீட்டு எடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது.
இது வழச்சல் என்ற வனப் பிரிவில் உள்ள ஒரு பழங்குடியினச் சமூகமான காடர்களை உள்ளடக்கியதாகும்.
இது தனது வளங்காகாப்புச் செயல்முறைகளுக்காக வேண்டி மேற்குத் தொடர்ச்சி மலை இருவாட்சிப் பறவைகள் அறக்கட்டளையின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுள்ளது.
தென்னிந்தியாவின் மிகவும் சிறியப் பழங்குடியினரான காடர் இனத்தவர், கேரளாவின் கொச்சிக்கும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கும் இடையே உள்ள மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
காடுகளில் வாழ்கின்ற இந்த காடர் இனத்தவர் வேளாண்மையினை மேற்கொள்வது இல்லை.