இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணக்கெடுப்பு ஆனது, 2025-26 ஆம் ஆண்டில் சரக்குகள் இறக்குமதி 2.5 சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் சரக்குகளின் ஏற்றுமதி 1.2 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியின் வளர்ச்சியானது, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியின் வளர்ச்சியை விட இரு மடங்கிற்கும் அதிகமாகும்.
2026-27 ஆம் ஆண்டில், அமெரிக்க டாலர் அடிப்படையில் ஏற்றுமதிகள் 4.9 சதவீதமும், இறக்குமதிகள் 6.0 சதவீதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக ஏற்றத்தாழ்வு ஆனது, 2025-26 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.8 சதவீத நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (CAD) ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CAD ஆனது, 2026-27 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.9 சதவீதமாக சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2025-26 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும், 2026-27 ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 2025-26 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 2026-27 ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு, பானங்கள், புகையிலை, போதைப் பொருள், எரிபொருள் மற்றும் விளக்கு சார்ந்த பொருள் ஆகியவற்றைத் தவிர்த்து நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் 2025-26 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.