இறந்த உடலில் இருந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 2025
February 28 , 2025 134 days 213 0
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (RGGGH) ஆனது, இது வரை 15 இறந்த நபர்களின் உடலில் இருந்து 100% வெற்றி விகிதத்துடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியன்று RGGGH, முதல் முறையாக இறந்த உடலில் இருந்து பெறப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
அந்த ஆண்டு மட்டும் எட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் மேலும் ஐந்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு மட்டும் இது வரையில் இரண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.