இலங்கை – FATFன் “சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நீக்கம்
October 24 , 2019 2098 days 755 0
நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது (FATF - Financial Action Task Force) இலங்கையை அதன் ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ இருந்து நீக்கியுள்ளது.
FATF ஆனது தனது உறுப்பு நாடுகளின் நிதி மோசடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உறுப்பு நாடுகளின் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தலைத் தடுப்பதற்கான (AML / CFT - Anti-Money Laundering and Countering the Financing of Terrorism) நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கின்றது.
FATF என்பது G7 இன் முன்னெடுப்பின் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
பண மோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கான பிற தொடர்புடைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
FATFன் செயலகமானது பாரிஸில் உள்ள OECD இன் (Organisation for Economic Co-operation and Development - பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தலைமையகத்தில் அமைந்துள்ளது.