விரைவான நிதி உதவிச் செயல்முறையின் (RFI) கீழ் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) 206 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அங்கீகரித்துள்ளது.
டிட்வா புயலால் ஏற்பட்டப் பேரழிவிற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த நிதி வழங்கப் படுகிறது.
RFI என்பது அவசரகால வரவு செலவு சமநிலை (BoP) தேவைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு விரைவான, குறுகிய கால நிதி உதவியை வழங்கும் ஒரு IMF அவசரக் கடன் செயல் முறையாகும்.
இது குறைந்தபட்ச நிபந்தனைகள் மற்றும் முழுமையான திட்டத் தேவைகள் இல்லாமல் ஒற்றை, விரைவான நிதி வழங்கீட்டினை அளிக்கிறது.
இதில் உள்நாட்டு உறுதியற்றத் தன்மை அல்லது வெளிப்புறத் தாக்கங்களுக்கான வழக்கமான நிதி உதவி வழி முறைகள் மற்றும் பேரிடர் சேதம் ஆனது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் ≥20% ஆக இருந்தால் ஒரு பெரிய இயற்கைப் பேரிடர் உதவி ஆகிய இரண்டு நிதி உதவி வழி முறைகள் உள்ளன.
இதில் திருப்பிச் செலுத்துதல் என்பது, கண்காணிப்பானது பருப்பொருளாதார நிலைத் தன்மையை மையமாகக் கொண்டு, பொதுவாக நிலையான IMF வட்டி விகிதங்களில் 3¼ முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலக் கட்டத்திற்கானது ஆகும்.