மத்திய அரசின் சிந்தனைச் சாவடியான நிதி ஆயோக் இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் டெல்டா தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டாவது டெல்டா தரவரிசையானது 2018 ஜீன் 01 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டங்களில் 111 இலட்சிய மாவட்டங்களில் அதிகரித்துள்ள முன்னேற்றங்களை அளவிடுகிறது.
இந்த ஆய்வானது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீர்வள ஆதாரங்கள், நிதி உள்ளடக்கல், திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகிய 6 மேம்பாட்டுப் பிரிவுகளில் நடத்தப்பட்டது.
இதில் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் ஒடிசாவின் நாயுபடா, உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர், பீஹாரின் அவுரங்காபாத் மற்றும் ஒடிசாவின் கோரபுட் ஆகிய மாவட்டங்கள் மிகவும் மேம்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.