சுகாதாரத் துறையில் 2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி – ஜுன் மாதத்திற்கிடையேயான இலட்சிய மாவட்டங்களின் நிதி ஆயோக்கின் டெல்டா தரவரிசையில் சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசையில் பீஜப்பூரைத் தொடர்ந்து ரை-போய் (மேகாலயா) இரண்டாவது இடத்திலும் பஹ்ரைச் (உத்தரப் பிரதேசம்) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இலட்சிய மாவட்டங்கள் திட்டமானது மாவட்டங்களை மேம்படுத்தி மாற்றியமைக்கும் நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிதி ஆயோக்கினால் தொடங்கப் பட்டுள்ளது.