TNPSC Thervupettagam

இலட்சிய மாவட்டங்களில் ஆரக்கிள் கிளவுட் என்பதின் பங்களிப்பு

August 22 , 2020 1830 days 658 0
  • நிதி ஆயோக்கானது தனது இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக வேண்டி ஆரக்கிள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 112 மாவட்டங்கள் 28% இந்திய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
  • ஆரக்கிள் நிறுவனமானது புதிய கிளவுட் தீர்வை வழங்க இருக்கின்றது. இது இந்த இலட்சிய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வை மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உதவ இருக்கின்றது. இது அதன் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் மேம்படுத்த உள்ளது.
  • இலட்சிய மாவட்டங்கள் திட்டமானது நிதி ஆயோக்கினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இலட்சிய மாவட்டங்களின் நிகழ்நேரச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகும். இது முக்கியமான 5 கருத்துரு பகுதிகளிலிருந்து 49 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்