இல்லத்தரசிகளின் வீட்டு வேலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
June 13 , 2026 84 days 197 0
வாகன விபத்து தொடர்பான இழப்பீட்டுக் கோரிக்கைகளில், இல்லத்தரசி ஒருவர் வழங்கும் வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் இழக்கப்படுவது என்பது இழப்பீடு பெறத்தக்க ஒரு தனிப்பட்ட வகையாகும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை அளித்தது.
நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வானது, இழப்பீட்டு நோக்கங்களுக்காக இல்லத்தரசிகளின் வீட்டுச் சேவைகளின் மதிப்பை மாதத்திற்கு குறைந்தபட்சம் ₹30,000 ஆக நிர்ணயித்துள்ளது.
குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு, சமையல், சுத்தம் செய்தல் மற்றும் வீட்டு நிர்வாகம் உள்ளிட்ட ஊதியம் பெறாத வீட்டு வேலைகளுக்கு அளவிடக்கூடிய பொருளாதார மதிப்பு இருப்பதை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் எதிர் பிரனாய் சேத்தி இடையேயான வழக்கின் தீர்ப்பில் அங்கீகரிக்கப்பட்ட காரணங்களுக்கு அப்பால், "வீட்டுப் பராமரிப்பு இழப்பை" இழப்பீடு கோருவதற்கான கூடுதல் காரணியாக இந்தத் தீர்ப்பு சேர்த்துள்ளது.