TNPSC Thervupettagam

இளஞ்சிவப்பு வரி

September 18 , 2025 4 days 67 0
  • பிங்க்/இளஞ்சிவப்பு வரி என்பது பெண்கள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்டத் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்துகின்ற பாலின அடிப்படையிலான விலை பாகுபாட்டைக் குறிக்கிறது.
  • இது அரசாங்கத்தால் விதிக்கப்படும் உண்மையான வரி அல்ல, ஆனால் நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கும் ஒரு விலை நிர்ணய நிகழ்வு ஆகும்.
  • "பிங்க் வரி" என்ற சொல் ஆனது 1994 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தோன்றியது.
  • சமீபத்திய ஆய்வில், பெண்களுக்கான தனிப்பட்டப் பராமரிப்புப் பொருட்கள் ஆண்களுக்கான ஒத்த தயாரிப்புகளை விட 13% அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் பெண்களுக்கான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் முறையே 7% மற்றும் 8% விலை அதிகம் என்று கண்டறியப்பட்டது.
  • அமெரிக்காவில் பெண்களுக்கான சட்டைகளின் உலர் சலவை விலை ஆண்களின் சட்டைகளுக்கு விதிக்கப்படுவதை விட 90% அதிகமாகும்.
  • பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக பாலின அடிப்படையிலான விலை பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபை 2017 ஆம் ஆண்டில் அதன் உறுப்பினர் நாடுகளை வலியுறுத்தியது.
  • சர்வதேச நிதி மாணவர்கள் சங்க ஆராய்ச்சியின்படி, 67% இந்தியத் தனிநபர்களுக்கு பிங்க் வரி பற்றி தெரியாது.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் மத்திய அரசு, முன்னர் 12% ஆக விதிக்கப்பட்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (GST) தனிப் பயன்பாட்டுத் துப்புரவுத் துணிகள் / சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பான்களுக்கு விலக்கு அளித்தது.
  • பாலின-நடுநிலை அல்லது ஆண்களுக்கான வகைகளைத் தேர்ந்தெடுத்து, ஓர் அலகுக்கான விலைகளை ஒப்பிடுவதன் மூலம் நுகர்வோர் இளஞ்சிவப்பு வரியைத் தவிர்க்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்