TNPSC Thervupettagam

இளம் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான இளைஞர் கூட்டுறவு: ஆய்வகம்

October 8 , 2019 2128 days 771 0
  • நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்திக் கட்டமைப்பின் இந்திய ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு புதிய இளைஞர் ஆய்வகத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இது “யூத் கோ: லேப் இந்தியா” என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.
  • இது இந்திய இளைஞர்களிடையே புதுமை மற்றும் சமூகத் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த சமூக கண்டுபிடிப்புச் சவால்களின் கீழ் தேசிய மற்றும் மாநில அளவில் 18-29 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் திட்டத்திற்காக  அழைக்கப்படுவர். மேலும் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் பிராந்திய மையத்தில் இவர்களது புத்தாக்க  யோசனைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும்  இந்த அமைப்பு இவர்களுக்கு வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்