இளம் பெண்களுக்கான STEM மற்றும் நிதி கல்வியறிவு மீதான நாரிசக்தி வர்தா
March 20 , 2022 1238 days 571 0
யுனிசெப் யுவாஹ் என்ற அமைப்பானது இளம் பெண்களுக்கான STEM மற்றும் நிதி கல்வியறிவு மீதான நாரிசக்தி வர்தா என்ற பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
STEM என்பதன் விரிவாக்கம் ‘அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்’ (Science, Technology, Engineering, and Mathematics) என்பதாகும்.
இந்த நிகழ்வானது, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் கீழான சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தினை மேற்கொள்ளும் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சிறப்பு வாரத்தின் ஓர் அங்கமாகும்.
STEM சார்ந்த துறைகளில் தொழில்முறை வாய்ப்பினை எய்துவதற்கு ஏதுவாக இளம் பெண்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்று இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.
2018 - 2019 ஆம் ஆண்டின் அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வின்படி, இந்தியாவிலுள்ள சுமார் 43% STEM பட்டதாரிகள் பெண்களே ஆவர்.
இது உலகிலேயே மிக அதிகமாகும்.
ஆனால் இந்தியாவிலுள்ள STEM துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் இவர்களுக்கான பங்கு 14% மட்டுமே ஆகும்.