இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மேக்ரோசெபலோசொரஸ் மரியான்சிஸ் எனும் இளம் ரைன்சோசர், சிஸ்டமேடிக் பேலியோண்டாலஜி எனும் பிரிட்டிஷ் இதழில் விவரிக்கப் பட்டுள்ளது.
இந்தப் புதைபடிவம் தெற்கு பிரேசிலில் கண்டெடுக்கப் பட்டது.
இந்த மாதிரியானது <2.5 செ.மீ அளவுள்ள ஒரு மண்டை ஓட்டைக் கொண்டுள்ளது என்பதோடுஇது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறிய ரைன்சோசர் குஞ்சு ஆகும்.
இந்தப் புதைபடிவமானது மேக்ரோசெபலோசொரஸ் மரியான்சிஸுக்கு என்று மிகவும் முக்கியமான தனித்துவமான அம்சங்களைக் காட்டுகிறது.
இந்த மாதிரி ஹைப்பரோடாபெடோன்டினே கிளேடின் முதல் பெரினேட் பதிவையும், கண்டப் படிவுகளில் காணப்படும் மிகப் பழமையான ஆர்கோசௌரோமார்ஃப் குஞ்சுகளில் ஒன்றையும் குறிக்கிறது.