இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது பள்ளி மாணவர்களுக்காக வேண்டி "யுவ விஞ்ஞானி கார்யக்ரம்" (யுவிகா) அல்லது "இளம் விஞ்ஞானி திட்டம்" என்ற ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது.
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் தொழிலைத் தொடர்வதற்கு அதிக மாணவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.