பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation - DRDO) இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வகங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஐந்து ஆய்வகங்கள் பின்வருமாறு:
செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சியானது பெங்களூரில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
குவாண்டம் தொழில்நுட்ப ஆய்வகமானது மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்பட இருக்கின்றது.
சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமையவிருக்கும் ஒரு ஆய்வகத்தில் அறிவாற்றல் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
சமச்சீரற்ற தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியானது கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைய இருக்கும் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
திறன்மிகு பொருள்கள் குறித்த ஆராய்ச்சியானது ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
DRDO அமைப்பானது ஏற்கனவே 52 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.
இராணுவத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI – Artificial Intelligence) பயன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக என். சந்திரசேகரன் தலைமையிலான குழு ஒன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் 2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.