TNPSC Thervupettagam

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

March 27 , 2019 2322 days 1420 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது பள்ளிக் குழந்தைகளுக்கான ஒரு சிறப்புத் திட்டமான “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” (யுவ விக்யானி காரியக்கரம்) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது “ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்” என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிப் பொருந்துவதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை இளம் மாணவர்களுக்குப் புகட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • கல்வி சாராத நடவடிக்கைகள் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்