பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஒரு உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியுள்ளது.
இந்த உடன்படிக்கையானது பாரம்பரியக் குடும்ப முறையை இழிவுபடுத்தி, விவாகரத்துகளை ஊக்குவித்து, சமுதாயத்தில் LGBTQ சமுதாயத்தினரை ஏற்றுக் கொள்ளச் செய்வதை ஊக்குவிப்பதாக துருக்கி கூறுகிறது.
அது தவிர பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் போதுமான சட்டங்கள் தனது நாட்டிலேயே உள்ளதாகவும் துருக்கி கூறுகிறது.
இஸ்தான்புல் உடன்படிக்கையானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து அதனை எதிர்கொள்வதற்கான உலகின் முதலாவது பிணை ஒப்பந்தமாகும்.
இந்த உடன்படிக்கையானது 2011 ஆம் ஆண்டில் ஐரோப்பிய அமைச்சர்கள் குழு ஒன்றியத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
குறிப்பு
2011 ஆம் ஆண்டில் இந்தஉடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு எனும் பெருமையை துருக்கி பெற்றது.
2012 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று தனது உள்நாட்டுச் சட்டத்தில் இஸ்தான்புல் உடன்படிக்கையை துருக்கி இணைத்தது.