மத்திய எஃகுத் துறை அமைச்சகமானது "சிந்தன் சிவிர்: ஒரு துடிப்பான, திறமையான மற்றும் உலகளவில் போட்டிமிக்க இந்திய எஃகுத் துறையை நோக்கி" என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வு இந்திய எஃகுத் துறையை மிகவும் துடிப்பான, திறமையான மற்றும் உலகளவில் போட்டி மிக்கதாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் எஃகுத் தொழில் துறைக்கான புதிய இலச்சினை ஒன்று வெளியிடப்பட்டது. இது “இஸ்பதி இராடா” என்று அழைக்கப்படுகின்றது.
இந்தக் கருப்பொருளில் பணியாற்றும் நிறுவனங்கள் மட்டுமே “இஸ்பதி இராடா” என்ற இலச்சினையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
நாட்டில் எஃகுப் பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் சமூகத்திற்கு அதிக பலத்தை அளிப்பது ஆகியவை இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.