இஸ்ரேல் நாடானது அரசாங்க நிதியுதவியுடன் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட டிரார்-1 எனப்படுகின்ற தனது முதல் முழுமையானத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியது.
இது புவியின் நிலநடுக்கோட்டிலிருந்து 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப் பட்ட ஒரு புவிசார்/புவிநிலை செயற்கைக்கோள் ஆகும்.
டிரார்-1 ஆனது 15 ஆண்டுகளுக்கு தேசியத் தகவல் தொடர்பு தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புவிசார் தகவல் பரிமாற்றச் சுற்றுப் பாதையை அடைந்த பிறகு, அந்த செயற்கைக் கோள் அதனை இறுதி சுற்றுப் பாதையில் நன்கு நிலைநிறுத்த உள் உந்துவிசையைப் பயன்படுத்தும், இது இஸ்ரேல் மற்றும் அதன் அருகிலுள்ளப் பகுதிகள் மீதான தகவல் தொடர்புகளைப் பேணும்.