இஸ்ரேலியப் பிரதமரின் முதல் ஐக்கிய அரபு அமீரக அலுவல் பயணம்
December 15 , 2021 1434 days 709 0
இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் ஐக்கிய அரபு, அமீரகத்திற்கான தனது முதல் அலுவல் ரீதியிலான பயணத்தினை (இஸ்ரேலிய அரசத் தலைவரின் முதல் பயணம்) தொடங்கினார்.
இஸ்ரேல் நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் 2015 ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் உலக வல்லமை நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் இந்த உத்திசார் பயணமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அணுசக்தி ஒப்பந்தமானது 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களாலும் கைவிடப்பட்டதாகும்.