இஸ்ரோ தினம் / தேசிய விண்வெளி தினம் 2025 - ஆகஸ்ட் 23
August 25 , 2025 15 hrs 0 min 41 0
இஸ்ரோவின் சாதனைகளையும், உலகளாவிய விண்வெளிச் சக்தியாக உருவாகி வரும் இந்தியாவின் எழுச்சியையும் தேசிய விண்வெளி தினம் கௌரவிக்கிறது.
இந்தத் தேதியானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மித வேகத்திலான தரையிறக்கத்தைக் குறிக்கிறது.
இது இந்தியாவை நிலவின் அந்தப் பகுதியை அடைந்த முதல் நாடாக மாற்றுகிறது.
"Aryabhatta to Gaganyaan: Ancient Wisdom to Infinite Possibilities" என்ற 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு இந்தியாவின் வானியல் பாரம்பரியத்தை அதன் விண்வெளி எதிர்காலத்துடன் இணைக்கிறது.