TNPSC Thervupettagam

இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து

June 20 , 2025 12 days 108 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் அறிவியலாளர் / விஞ்ஞானி நெல்லை சு.முத்து சமீபத்தில் காலமானார்.
  • அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூத்த அறிவியலாளராகப் பணியாற்றினார்.
  • அவர் மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர்கள் சங்கத்தினால் வழங்கப் படும் கவி மாமணி விருதைப் பெற்றவர் ஆவார்.
  • அறிவியல், குழந்தைகள் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு போன்ற சில தலைப்புகளில் 70க்கும் மேற்பட்டப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • அவரது நான்கு புத்தகங்களுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புத்தக விருது மற்றும் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.
  • அவரது 'விண்வெளி 2057' (SKY 2057) என்ற புத்தகம் ஆனது 2000 ஆம் ஆண்டிற்கான கணிதம், வானியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் சிறந்தப் புத்தக விருதை வென்றது.
  • மற்றொருப் புத்தகமான 'அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு' (அறிவை வழங்கும் அறிவியல் தந்திரங்கள்), 2004 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் இலக்கியப் பிரிவில் சிறந்தப் புத்தக விருதை வென்றது.
  • 'ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்' (ஐன்ஸ்டீனும் விண்வெளியும்) என்ற புத்தகம் ஆனது 2005 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கை வரலாறு மற்றும் மிகவும் தனிப்பட்ட வரலாற்றுப் பிரிவுகளில் சிறந்த புத்தக விருதை வென்றது.
  • அவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் பணி ஆற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்