இஸ்ரோவின் ஆதித்யா-L1 கலம், சூரியப் புயல் ஆய்வு என்ற முக்கிய உலகளாவிய முயற்சியில் இணைகிறது.
ஆதித்யா-L1 என்பது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் PSLV C57 கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வகமாகும்.
இது பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி 1 (L1) பகுதியைச் சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளது என்பதோடுஇது தொடர்ச்சியான சூரியக் கண்காணிப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் பிளாஸ்மா ஆய்வுத் தொகுப்பு உட்பட 7 கருவிகள் உள்ளன.
சூரியப் புயல்களில் சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் சூடான வாயு மற்றும் காந்த ஆற்றலின் மிகப்பெரிய குமிழ்கள் ஆன சூரிய வெப்ப உமிழ்வு (CME) நிகழ்வுகள் அடங்கும்.
2024 ஆம் ஆண்டு மே மாதத்தின் கானனின் புயலின் போது, ஆதித்யா-L1, ஆறு அமெரிக்க செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து, CME காந்தப்புலக் கோடுகள் உடைந்து மீண்டும் இணைந்த காந்த மறு இணைப்பைக் கண்டறிந்தது.
இந்த நிகழ்வு திடீர் காந்தப்புலத் திருப்புமுனையாக மாறியது என்பதோடுஇது அந்தத் துகள்களை வேகப் படுத்தி, புயலைத் தீவிரப்படுத்தி, செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு, புவியிடங்காட்டிக் கருவிகள் மற்றும் மின் கட்டமைப்புகளைப் பாதித்தது.