January 15 , 2022
1264 days
620
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (இஸ்ரோ) டாக்டர்.S. சோமநாத் அவர்களை அதன் புதிய தலைவர் மற்றும் விண்வெளிச் செயலாளராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
- தற்போது இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC - Vikram Sarabhai Space Centre) இயக்குநராக உள்ளார்.
- இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் இயக்குநராக செயல்பட உள்ளார்.
- இவர் கைலாசவடிவு சிவன் அவர்களின் நீட்டிக்கப்பட்ட ஒரு பதவிக் காலம் நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து இந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
- இஸ்ரோவின் தலைவர் பொறுப்பு, விண்வெளிச் செயலாளர் மற்றும் விண்வெளி ஆணையத்தின் தலைவர் ஆகிய பதவிகளை பொதுவாக ஒருவர் மட்டுமே வகிப்பார்.
- இஸ்ரோவின் தலைவர் இந்திய அரசின் செயலாளராக செயல்படுகிறார்.
- இவர் விண்வெளி துறையின் நிர்வாகியும் ஆவார்.
- இந்தத் துறையானது நேரடியாக பிரதமர் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

Post Views:
620