இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுதல் நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி
February 7 , 2023 1018 days 440 0
இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுதல் என்ற நடவடிக்கைகளுக்கான தனது முதல் சிறப்புப் பிரதிநிதியை கனடா அரசு நியமித்து உள்ளது.
நாட்டில் முஸ்லிம்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தப் பதவியானது உருவாக்கப் பட்டது.
இதில் பத்திரிகையாளரும் ஆர்வலருமான அமிரா எல்கவாபி சாம்பியன், ஆலோசகர், நிபுணர் மற்றும் பிரதிநிதி என்ற பல பரிமாணங்களில் பணியாற்ற உள்ளார்.
இஸ்லாமியத்திற்கு எதிரான பாகுபாடுகள், அமைப்பு ரீதியிலான இனவாதம், இன பாகுபாடு மற்றும் மத சகிப்புத் தன்மையற்றல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் அந்நாட்டு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவர் ஆதரவளித்து அதனை மேம்படுத்துவார்.