TNPSC Thervupettagam

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலிடப்பட்ட சாதியினர் நிலை

September 24 , 2022 1015 days 424 0
  • இந்து, பௌத்தம் மற்றும் சீக்கியம் அல்லாத பிற மதங்களுக்கு மாறிய பட்டியலிடப் பட்ட சாதியினர் அல்லது தலித்துகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு தேசிய ஆணையத்தை அமைக்க உள்ளது.
  • தற்போதைய பட்டியலிடப்பட்ட சாதியினர் பட்டியலில் அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் இது ஆய்வு செய்யும்.
  • இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த ஆய்வில் சேர்க்கப் படவில்லை.
  • 341வது விதியின் கீழான 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணையானது இந்து மதம், சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்த தனிநபரையும் பட்டியலிடப்பட்ட சாதியினர் வகுப்பின் கீழ் ஒரு உறுப்பினராக அங்கீகரிக்க முடியாது என்று கூறுகிறது.
  • முதலில் வெளியிடப்பட்ட ஆணையானது இந்து மதத்தை மட்டுமே சேர்ந்த பட்டியலிடப்பட்ட சாதியினர் வகுப்பினரை மட்டுமே அவ்வாறான உறுப்பினர்களாக  வகைப்படுத்தியது.
  • இது பின்னர் 1956 ஆம் ஆண்டில் சீக்கியர்களையும், 1990 ஆம் ஆண்டில் பௌத்தர்களையும் சேர்ப்பதற்காகத் திருத்தியமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்