உச்ச நீதிமன்றத்தினால் இலக்கு நியமிக்கப்பட்ட, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC), ஈடு செய்யும் காடு வளர்ப்பு நிதிகளின் மேலாண்மை குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 2,09,297 ஹெக்டேர் இலக்கில் 1,78,261 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியா சுமார் 85 சதவீதத்திலான ஈடுசெய்யும் காடு வளர்ப்பு இலக்கை அடைந்தது.
ஈடு செய்யும் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் (CAMPA) கீழான நிதியைக் கையாள்வதில் தவறான பயன்பாடு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் உள்ளன.
குஜராத், சண்டிகர், மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் இலக்குகளை முழுமையாக அடைந்தன.
மத்தியப் பிரதேசம் 21,107.68 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 21,746.82 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டது.
கர்நாடகா 2,775.12 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 2,761.26 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டது.
அருணாச்சலப் பிரதேசம் 21,478.03 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 20,719.46 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 96.6 சதவீத இலக்கினை அடைந்தது.
உத்தரப் பிரதேசம் 6,096.7 ஹெக்டேரில் இருந்து 5,877.16 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 96.4 சதவீத இலக்கினை எட்டியது.
மேகாலயா 514.76 ஹெக்டேரில் இருந்து 114.56 ஹெக்டேரில் 22.3 சதவீதத்தை மட்டுமே எட்டியது.
மணிப்பூர் 1,759.84 ஹெக்டேரில் இருந்து 666.94 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 37.9 சதவீத இலக்கினை எட்டியது.
கேரளா 433.06 ஹெக்டேரில் இருந்து 171.80 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 39.7 சதவீத இலக்கினை எட்டியது.
மேற்கு வங்காளம் 1,911.74 ஹெக்டேரில் இருந்து 748.25 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் சுமார் 39.2 சதவீத இலக்கினை எட்டியது.
தமிழ்நாடு 262.39 ஹெக்டேர் இலக்கில் 84.76 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 32.3 சதவீத இலக்கினை எட்டியது.
2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான மாநில வருடாந்திரத் திட்டங்களுக்கு தேசிய CAMPA 38,516 கோடி ரூபாயை அங்கீகரித்தது.
மொத்த அங்கீகரிக்கப்பட்ட நிதியில், மாநிலங்கள் சுமார் 29,311 கோடி ரூபாயை வனத் துறைகளுக்கு ஒதுக்கின, அதில் 26,001 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டன.
இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நிதியில் 67.5 சதவீதம் மட்டுமே செலவிடப் பட்டது.
மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிப் பயன்பாடு முறையே 100 சதவீதம், 100 சதவீதம் மற்றும் 97.8 சதவீதம் என வேறுபட்டது.
இதற்கு நேர்மாறாக, டெல்லி அதன் CAMPA நிதியில் சுமார் 23 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியது.