இந்திய ஆராய்ச்சியாளர்கள் பிப்ரவரி 2026 இல் ஒரு புதிய ஈயம் இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒளியுணர்வியை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சாதனமானது ஹைதராபாத்தில் உள்ள தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தால் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் ஐஐடி ஹைதராபாத்துடன் இணைந்து உருவாக்கப் பட்டது.
இது Cs2AgBiBr6 எனப்படும் இரட்டை பெரோவ்ஸ்கைட் வகை பொருளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறைந்த விலை கார்பன் மின்முனைகளைப் பயன்படுத்துகிறது.
ஈயம் இல்லாத, சுயமாக இயங்கும் தன்மை கொண்ட இந்த ஒளியுணர்வியானது, புலப்படும் ஒளிக்கு வலுவான எதிர்வினையை வெளிப்படுத்துகிறது.
இது 60 நாட்களுக்குப் பிறகும் 90% க்கும் அதிகமான செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது மற்றும் அறை வெப்பநிலையில் ஒருபடி பூச்சு முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது.
இது நுகர்வோர் மின்னணுவியல், பாதுகாப்பு அமைப்புகள், தொழில்துறைக் கண்காணிப்பு மற்றும் உயிரி மருத்துவப் படமிடல் ஆகியவற்றில் பயன்படுத்தப் படலாம்.