ஈராக் நாட்டின் கெமுனேவின் குர்திஸ்தான் என்ற பகுதியில் ஒரு பழமையான ஈராக் நகரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான வெண்கலக் காலத்தினைச் சேர்ந்தது என கணிக்கப் பட்டுள்ளது.
ஈராக்கின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைய காரணமான வறட்சி தான் இந்த நகரம் திடீரென தென்படுவதற்கான ஒரு காரணமாகும்.
கி..மு 1550 முதல் கி.மு. 1350 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மிட்டானிப் பேரரசின் ஆட்சியின் போது இந்தப் பண்டைய நகரம் ஒரு முக்கிய மையமாக இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறியுள்ளது.