நீண்டகால அதிகபட்ச பணவீக்கத்திற்குப் பிறகு, அதன் நிதிப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக ஈரான் அரசானது அதன் ரியால் நாணயத்தில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்க உள்ளது.
வெளிச் சந்தையில் அதன் நாணய மாற்று விகிதம் ஆனது, அமெரிக்க டாலருக்கு தோராயமாக 1,150,000 ரியால்களாக உள்ளது.
இரண்டு அலகுகளும் பயன்படுத்தப்படும் மூன்று ஆண்டு கட்டத்தினைத் தொடர்ந்து இதற்கான நாணயங்களை மத்திய வங்கி தயாரிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளன.
ரியால் அதிகாரப்பூர்வ நாணயமாக இருக்கும் என்பதோடுமேலும் இந்த மாற்றம் ஆனது உடனடியாக அல்லாமல் படிப்படியாக மட்டுமே அமல்படுத்தப்படும்.