தனது நாட்டின் தலைநகரான தெஹ்ரான், மிகக் குறைவான நீர் மட்டங்கள் காரணமாக மிகுந்த நெருக்கடியில் உள்ளதுடன், ஈரான் கடுமையான நீர்ப் பற்றாக் குறையை /நெருக்கடியை எதிர்கொள்கிறது.
சுமார் 15 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானின் பெருநகரப் பகுதி, முற்றிலும் தண்ணீர் இல்லாமல் போகும் அபாயத்தில் உள்ளது.
தெஹ்ரானுக்கு நீர் வழங்கும் லத்யன் அணை (9% தான் நிரம்பியுள்ளது), அமீர் கபீர் அணை (8% நிரம்பியுள்ளது) ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட காலியாக உள்ளன என்ற நிலையில்ஒட்டுமொத்த நீர்த்தேக்கங்கள் சுமார் 11% கொள்ளளவில் உள்ளன.
ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில், 3% கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கங்கள் மட்டுமே உள்ளன என்ற நிலையில்இது சுமார் 3 மில்லியன் மக்களுக்கு நீர் விநியோகத்தில் அச்சுறுத்தலை எழுப்புகிறது.
ஈரான், தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பெருகிவரும் நகர்ப்புற மக்கள்தொகையால், கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் மோசமானதாக, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வறட்சி நிலையை எதிர்கொண்டுள்ளது.
விண்வெளியில் இருந்து காணும் போதே அங்கு தண்ணீர்ப் பற்றாக்குறை தெளிவாகப் புலப்படும் விதமாக உள்ளது என்ற நிலையில்இது அந்த நாடு முழுவதும் உள்ள நீர் நெருக்கடியின் அளவை எடுத்துக்காட்டுகிறது.
அரிசி, கோதுமை மற்றும் பிற அதிகமான நீர்ப் பயன்பாடு மிக்க பயிர்கள் நீர்ப் பற்றாக்குறைக்கு பங்களித்துள்ளதனால், ஈரானின் நீரில் சுமார் 90% ஆனது வேளாண்மையில் பயன்படுத்தப் படுகிறது.
ஈரானிய அதிகாரிகள் இப்போது தங்கள் தலைநகரை ஈரானின் தெற்கு மக்ரான் கடற்கரைக்கு அருகில் மக்ரான் நகரத்திற்கு மாற்ற முன்மொழிகின்றனர்.