TNPSC Thervupettagam

ஈரான் மற்றும் IAEA அணுசக்தி ஒப்பந்தம்

September 15 , 2025 7 days 57 0
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஈரானும் ஐக்கிய நாடுகள் சபையும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.
  • சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆனது இந்த ஒப்பந்தம் அனைத்து ஈரானிய அணுசக்தி நிலையங்களுக்கும் அணுகலை வழங்குகிறது என்று கூறியது.
  • இருப்பினும், இந்த ஒப்பந்தமானது புஷெர் அணுமின் நிலையத்தைத் தவிர வேறு எந்த நிலையத்திற்கும் ஆய்வாளர் அணுகலை மேற்கொள்வதற்கான உத்தரவாதம் அளிக்கவில்லை என்று ஈரான் கூறியது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியதை அடுத்து, ஒத்துழைப்பில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • ஈரான் நாட்டு அரசு, ஜூலை மாதம் IAEA முகமையுடனான ஒத்துழைப்பை இடை நிறுத்தியதோடு, அந்த நிறுவனம் இரட்டைத் தரப் பாகுப்பாட்டில் இருப்பதாகவும், ஆய்வுகளை தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டியது.
  • சர்வதேசத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டால் அல்லது விரோத நடவடிக்கைகள் ஏற்பட்டால் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்று தெஹ்ரான் எச்சரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்