ஈரான் அரசானது தனது நாட்டின் அணுசக்தியினைக் கண்காணிப்பதற்கு சர்வதேச அணுசக்தி முகமை நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான் தனது முக்கிய அணுசக்தித் தளங்களிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் புதிய பதிவேற்றச் சில்லுகளைப் பொருத்துவதற்கு என்று சர்வதேச ஆய்வாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் நாடானது அதன் யுரேனியக் கையிருப்பினைத் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் ஆயுத ரகங்கள் எனும் தரநிலைக்கு வேண்டிய அளவில் தனது யுரேனியக் கையிருப்புகளைச் சிறிய அளவில் செறிவூட்டுகிறது.