TNPSC Thervupettagam

ஈரான்-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம்

October 1 , 2025 30 days 60 0
  • தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் மொத்தம் 5 GW திறன் கொண்ட நான்கு அணு உலைகளை உருவாக்குவதற்காக ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்தத் திட்டமானது ஈரானின் மின் தேவையை, குறிப்பாக உச்ச கட்ட மின் தேவையின் போது மின்சாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • ரஷ்யாவின் ரோசட்டம் நிறுவனமானது இவற்றின் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து மேற்கொள்ளும் என்பதோடு ஈரான் தற்போது புஷேரில் ரஷ்யாவால் கட்டப்பட்ட 1 ஜிகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையம் ஒன்றைக் கொண்டு உள்ளது.
  • ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான தடைகளைத் தாமதப்படுத்துவது குறித்த ஐ.நா. பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்புக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்