நிலம், கடல் மற்றும் வான்வழி ஆதரவை உள்ளடக்கிய இருபத்தி ஆறு நாடுகள் உக்ரைனுக்கு போருக்குப் பிந்தையப் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதியளித்து உள்ளன.
உக்ரைனை ஆதரிக்கும் 35 நாடுகளின் தலைவர்களுடன் பாரிசில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்குப் பிறகு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இந்த உறுதி மொழியை அறிவித்தார்.
எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில், போர் முடிந்த உடனேயே இந்த உத்தரவாதங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த உத்தரவாதங்களுக்கு அமெரிக்கா தனது பங்களிப்பை முடிவு செய்து வருகிறது.
பிரான்சும் ஐக்கியப் பேரரசும் போருக்குப் பிந்தைய படைப் பிரிவுகளை அனுப்ப அவற்றின் விருப்பத்தினைத் தெரிவித்த அதே நேரத்தில் இத்தாலி மற்றும் பல்கேரியா போன்ற நாடுகள் போர் சாராத ஆதரவை வழங்கின.