ரஷ்ய நாட்டு சார்பிலான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் உக்ரைனைச் சேர்ந்த 90க்கும் மேலான இராணுவத் தளங்களை அழித்துள்ளன.
இதில் 14 வான்படைத் தளங்கள், கட்டளை வழங்கீட்டு முகாம்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் S-300 வான்பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
லூட்ஸ்க் இராணுவ வான்படைத் தளம், இவானோ-பிரான்கிவிஸ்க் வான் படைத் தளம், மெலிட்டோபோல் வான்படைத் தளம், மைகோலைவ் வான்படைத் தளம், கோஸ்டோமெல் வான்படைத் தளம், மற்றும் செர்னிஹிவ் வான்படைத் தளம் போன்ற முக்கிய வான்படைத் தளங்கள் இதில் கடுமையாக தாக்கப்பட்டதால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.