TNPSC Thervupettagam

உக்ரைன் அமைதித் திட்டம் 2025

November 27 , 2025 16 hrs 0 min 21 0
  • ஐரோப்பாவின் E3 (பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி) அமெரிக்காவின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்திற்கு எதிர் முன்மொழிவை வெளியிட்டுள்ளது.
  • இது உக்ரைனின் இறையாண்மையை உறுதிப்படுத்தி, ரஷ்யா, உக்ரைன் மற்றும் நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) இடையே ஓர் ஆக்கிரமிப்பு அல்லாத ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
  • இந்தத் திட்டம் ஆனது உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கி, அதன் இராணுவத்தை 800,000 ஆகக் கட்டுப்படுத்துகிறது என்பதோடு மேலும் அமைதிக் காலத்தில் நேட்டோ படைப் பிரிவுகள் உக்ரைனில் தங்குவதைத் தடுக்கிறது.
  • இது உக்ரைனுக்கான ஒரு முக்கிய மீள் மேம்பாட்டுத் திட்டத்தினை ஆதரிப்பதோடு, படிப்படியான தடை விலக்கு மற்றும் ரஷ்யாவிற்கு G8 அமைப்பின் அங்கத்துவத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
  • தொடர்புப் பகுதியிலிருந்து தொடங்கும் பிராந்தியப் பேச்சுவார்த்தைகளுடன், அமைதி வாரியத்தின் கீழ் கண்காணிக்கப்படும் ஓர் ஒப்பந்தத்திற்குப் பிறகு போர் நிறுத்தம் தொடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்