2025 ஆம் ஆண்டு அக்டோபர் 05 ஆம் தேதியன்று, தீவிரமான ரஷ்ய எறிகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் பல உக்ரைன் பிராந்தியங்கள் மீது நடத்தப்பட்டன.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் கார்கிவ், பொல்டாவா, டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சுமி, கெர்சன், மைகோலைவ், டினிப்ரோ, சபோரிஜியா, செர்னிஹிவ், வின்னிட்சியா, இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க், ஒடேசா மற்றும் லிவிவ் ஆகியவை அடங்கும்.
இதுவரையில் உக்ரைனின் எரிவாயுத் தளங்கள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட எறிகணைகள் மற்றும் சுமார் 500 ஆளில்லா விமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.