TNPSC Thervupettagam

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

August 10 , 2025 2 days 73 0
  • தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்புத் திட்டத்திற்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று பெயரிடுவதற்கு எதிரான மனுவை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • இந்த மனுவை தவறான கருத்தாக்கம் மற்றும் சட்டத்தின் துஷ்பிரயோகம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • இந்த மனுவிற்காக சி. வி. சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டதோடு இந்த அபராதம் ஆனது தமிழக அரசின் நலத்திட்டங்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப் பட வேண்டும்.
  • தமிழக அரசுத் திட்டங்களுக்கு உயிருடன் உள்ள நபர்களின் பெயரை வைப்பதைத் தடுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • ஆளும் கட்சி மற்றும் அதன் முதலமைச்சரின் மீது மட்டும் கட்டுப்பாடு விதிப்பது அரசியல் நோக்கத்தைக் காட்டுகிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • அரசியல் தலைவர்களின் பெயர்களைத் திட்டங்களுக்குச் சூட்டுவது என்பது இந்தியா முழுவதும் ஒரு பொதுவான நடைமுறை என்று நீதிமன்றம் கூறியது.
  • பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிற உயிருடன் உள்ள தலைவர்களின் பெயர்களைக் கொண்ட திட்டங்களை மனுதாரர் எதிர்க்கவில்லை.
  • 1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கீட்டு ஆணையின் 16A பத்தியின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கவும் அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
  • ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக அரசு விளம்பரத்தில் உள்ளடக்க ஒழுங்குமுறைக் குழுவின் தலையீட்டை மேற்கொள்ள மனு கோரியது.
  • 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பொதுநலத் திட்டம் குடிமக்களை மையமாகக் கொண்டது என்றும், அரசியல் பிரச்சாரத்திற்காக அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
  • இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு அரசு தனது நலத்திட்டங்களுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்