உங்கள் கனவைச் சொல்லுங்கள் – வீடுவாரியான கணக்கெடுப்பு
January 9 , 2026 4 days 70 0
தமிழ்நாடு அரசானது உங்கள் கனவைச் சொல்லுங்கள் (உங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்) என்ற மாநில அளவிலான வீடு வாரியான கணக்கெடுப்பைத் தொடங்குகிறது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது, தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு நடத்தப்படும்.
இது 50,000 பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் வருகைகள் மூலம் சுமார் 1.91 கோடி குடும்பங்களில் நடத்தப்படும்.
குடும்பங்கள் அரசாங்கத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிப்பார்கள் மற்றும் மூன்று முன்னுரிமை விருப்பங்களை பட்டியலிடுவார்கள்.
கைபேசிப் பயன்பாட்டைப் பயன்படுத்தி விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும், மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனித்துவமான கண்காணிப்புக் குறியீடு வழங்கப் படும்.
இந்தக் கணக்கெடுப்பு முதல்வரின் முகவரித் துறை மூலம் செயல்படுத்தப்படும்.