முதன்முறையாக, இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகத்தினைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வேண்டிய அதிகாரப் பூர்வ இடஒதுக்கீடுக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தக் கொள்கையானது உச்ச நீதிமன்றத்தின் உள் நிர்வாகத்தில் உள்ள நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்குப் பொருந்தும்.
2025 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கொள்கையானது, பதிவாளர்கள், மூத்த தனிப்பட்ட உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் நீதிமன்ற அவை உதவியாளர்கள் போன்ற பதவிகளுக்கு பொருந்தும்.
பதவி உயர்வுகளில், SC ஊழியர்களுக்கு 15% இடஒதுக்கீடும், ST ஊழியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் கிடைக்கப்பெறும்.
இந்த நடவடிக்கையானது, உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியான பட்டியலிடப்பட்ட சாதியினைச் சார்ந்த B.R.கவாய் காலத்தில் தொடங்கப்பட்டது.