TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

August 2 , 2019 2112 days 723 0
  • இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 31லிருந்து 34 ஆக அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மசோதாவானது நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.
  • உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956 ஆனது தொடக்க காலத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தவிர்த்து அதிகபட்சம் 10 நீதிபதிகள் பணியாற்ற வழிவகை செய்துள்ளது.
  • இந்தச் சட்டமானது நீதிபதிகளின் எண்ணிக்கையை 25லிருந்து 30 ஆக (உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத்  தவிர) அதிகரிப்பதற்காக கடைசியாக 2009 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்