நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சியின் போது நீதிபதிகள் மகேஷ்வரி மற்றும் கன்னா ஆகியோருக்கு பதவிக்கான பிரமாணத்தை செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆகும். நீதிபதிகள் மகேஷ்வரி மற்றும் கன்னா ஆகியோரின் பதவிப் பிரமாணங்களோடு சேர்த்து தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கின்றது.