உச்ச நீதிமன்றத்தின் பாலின உணர்திறன் தீர்ப்பு அறிக்கை
August 12 , 2026 41 days 212 0
பாலினப் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான 2023 ஆம் ஆண்டின் கையேட்டை மாற்றி, Judgments and Gender: Sensitivity and Compassion in Writing Judgments என்ற அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
‘வழக்குத் தொடுப்பவர்’ (prosecutrix) என்ற வார்த்தைக்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர், தப்பியவர் அல்லது புகார்தாரர் போன்ற நடுநிலையான சொற்களைப் பயன்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
அறநெறி சார்ந்த மொழி, பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுதல் மற்றும் தப்பியவரின் கடந்த கால பாலியல் வரலாறு குறித்த தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்குமாறு நீதிமன்றங்களை இது கேட்டுக் கொள்கிறது.
மன அதிர்வு குறித்த விழிப்புணர்வுடன் கூடிய அணுகுமுறை, சாட்சிகளை மரியாதையுடன் நடத்துதல் மற்றும் தப்பியவர்களின் கண்ணியம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இது பரிந்துரைக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறை மொழிக்கான ‘பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், வெளிப்பாடு மற்றும் பாலினப் பண்புகள்’ (SOGIESC) கட்டமைப்பையும் இது ஊக்குவிக்கிறது.