TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் பொன்னார்ட் விதி

September 25 , 2025 15 hrs 0 min 37 0
  • பொன்னார்ட் மற்றும் பெர்ரிமேன் (1891, ஐக்கியப் பேரரசு) வழக்கிலிருந்து பெறப்பட்ட பொன்னார்ட் தரநிலையானது, பிரதிவாதியால் கூறப்படும் அவதூறை நியாயப்படுத்த முடியாவிட்டால், நீதிமன்றங்கள் உறுத்துக் கட்டளையை வழங்குவதைத் தடுக்கிறது.
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது 2024 ஆம் ஆண்டில் ப்ளூம்பெர்க்கிற்கு எதிரான மறு தரப்பிலா உறுத்துக் கட்டளையை ரத்து செய்வதன் மூலம் இந்தத் தரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • உறுத்துக் கட்டளையை வழங்காதது அதிக அநீதியை ஏற்படுத்தும் சூழலின் போது மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • அதானி அவதூறு வழக்கில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான டெல்லி நீதிமன்றத்தின் மறுதரப்பிலா உறுத்துக் கட்டளை உத்தரவு, வாதத்தைக் கேட்காமல் முன் கூட்டியே தடையை விதிப்பதன் மூலம் இந்தத் தர நிலையை மீறியது.
  • இத்தகைய முன் கூட்டிய தடையானது, 19(2) சரத்தின் கீழ் உள்ள நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுப் பேச்சுச் சுதந்திரத்தை உறுதி செய்கின்ற இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) சரத்தினை மீறுகிறது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது பேச்சு சுதந்திரத்தையும் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையையும் அச்சுறுத்தும் மறுதரப்பிலா உறுத்துக் கட்டளைகளை பலமுறை கண்டித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்