உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம் - வி. மோகனா
June 3 , 2026 15 days 142 0
மூத்த வழக்கறிஞர் வி. மோகனா இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்து மல்ஹோத்ராவுக்குப் பிறகு, வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட இந்தியாவின் வரலாற்றில் இரண்டாவது பெண்மணி இவராவார்.
வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக உயர்த்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண்மணி இவராவார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் 12-வது பெண் நீதிபதியாக இவர் பதவி ஏற்கிறார்.
இவரது நியமனத்தின் மூலம், உச்ச நீதிமன்றத்தில் வி. மோகனா மற்றும் பி. வி. நாகரத்னா ஆகிய இரண்டு பெண் நீதிபதிகள் பணியாற்றுவார்கள்.
நீதிபதி பி. வி. நாகரத்னா 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1989 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட எம். பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாவார்.